- அய்யம்பேட்டையில் பைபாஸ் சாலை வளைவில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து.பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உள்பட ஆறு பயணிகள் காயமடைந்த நிலையில், அனைவரும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.
சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி அரசு சொகுசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை கும்பகோணத்தைச் சேர்ந்த பழனிவேல் (45) என்பவர் ஓட்டி வந்தார். இதில் 15-பேர் பயணம் செய்தனர். பேருந்து பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை, பைபாஸ் சாலை திருப்பத்தில் திரும்பிய போது, அருகில் இருந்த வயலில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதமாக திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் பழனிவேல் உட்பட ஆறு பேர் பலத்த படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக 108-ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அய்யம்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.