- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே வழுத்தூரை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் பிரதீப் (21) கோயம்புத்தூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாபநாசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது எதிரில் தஞ்சையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து பிரதீப் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி கொண்ட பிரதீப் சிறிது தூரம் இழுத்த செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது பற்றி தகவலறிந்த அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிமதி மற்றும் போலீசார் உயிரிழந்த பிரதீப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இப்பகுதி மக்கள் பேருந்து ஓட்டுனரை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேருந்து முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேல், காவல் ஆய்வாளர் ரவிமதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/dhoni-bundy-meeting-what-will-csk-do-suresh-raina-gave-an-update/
இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் தஞ்சை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிரமம் அடைந்தனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.