பட்டுக்கோட்டை அருகில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு சடலமாக மீட்பு…

1 Min Read

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு சடலமாக தென்னந்தோப்பில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள ஆண்டிக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள குணபாலன் என்பவரது தென்னந்தோப்பில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்குள் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை திணிக்கப்பட்டு கிடந்துள்ளது.

தோப்பிற்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/the-issue-of-vips-appearing-for-trial-madras-high-court-dismissed-the-case-seeking-to-lay-down-the-rules/

குழந்தையை தென்னந்தோப்பில் வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply