கேரள மாநிலம், கொச்சியில் குழந்தையின் தாய் இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண். பசியால் தவித்த 4 மாத குழந்தைக்கு தாயாக மாறி, ஒரு பெண் போலீஸ் பால் கொடுத்தார்.
பாட்னாவை சேர்ந்த ஒரு தொழிலாளி குடும்பத்துடன் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். மேலும் கடைசி குழந்தை பிறந்து 4 மாதம் தான் ஆகிறது. இந்த தொழிலாளியின் மனைவிக்கு இதயக் கோளாறு பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு அடிதடி வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அவரது மனைவியும், குழந்தைகளும் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தனர்.

இதற்கு இடையே நேற்று முன் தினம் திடீரென அவருக்கு மூச்சு திணல் பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த பெண்ணின் 4 மாத குழந்தை உள்பட 4 குழந்தைகளும் தனியாக இருப்பதை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள், இது குறித்து கொச்சி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தகவல் அறிந்து வந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு சென்ற போது 4 மாத குழந்தை பசியால் கதறி கதறி அழுது கொண்டிருந்தது.

பசியால் கதறி கதறி அழுது கொண்டிருந்த குழந்தையை பார்த்த ஆர்யா என்ற பெண் போலீஸ் ஒரு நிமிடம், தான் போலீஸ் என்பதை மறந்து அந்த குழந்தைக்கு தாயாக மாறினார். பின்னர் உடனே அந்த குழந்தையை கையில் எடுத்து அந்த குழந்தைக்கு பால் கொடுத்தார். பால் கொடுத்த சிறிது நேரத்திலேயே பசி நீங்கி அந்த குழந்தை சிரிக்க தொடங்கியது. அதன் பிறகு போலீசார் 4 குழந்தைகளையும் கொச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெண் போலீஸ் ஆர்யாவின் இந்த செயலை அங்கி இருந்த அனைவரும் பாராட்டி வந்தனர்.
அருமை