திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழாவில் கூட்ட நெரிசலில் பக்தர் ஒருவரை போலீசார் தாக்குதல் – வீடியோ பரபரப்பு..!

1 Min Read

சிவகிரியில் திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழாவில் கூட்ட நெரிசலில் பெண் போலீசாரை இடித்தாக கூறப்படும் நிலையில் பக்தருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதனால் அந்த நபரை காவலர்கள் பணியனை பிடித்து இழுத்து தாக்கி கீழே விழும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தென்காசி மாவட்டம், அடுத்த சிவகிரி திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் விரதம் இருந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தனது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழாவில் கூட்ட நெரிசலில் பக்தர் ஒருவரை போலீசார் தாக்குதல்

இதில் சிவகிரி, வாசுதேவநல்லூர், தேவிபட்டினம், ராயகிரி, கூடலூர், உள்ளார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூக்குழி திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் பெண் போலீசாரை இடித்தாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த பெண் போலீசார் பக்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழாவில் கூட்ட நெரிசலில் பக்தர் ஒருவரை போலீசார் தாக்குதல்

அதனால் பக்தருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த சக காவலர்கள் பெண் போலீஸை கூட்ட நெரிசலில் இடித்ததாக கூறப்படும் நபரை பனியனை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழாவில் கூட்ட நெரிசலில் பக்தர் ஒருவரை போலீசார் தாக்குதல்

பின்னர் கீழே விழுந்ததும் மீண்டும் காவல்துறையினர் தாக்கும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூக்குழி திருவிழாவில் கூட்ட நெரிசலில் பக்தர் ஒருவரை போலீசார் தாக்கும் வீடியோ பூக்குழி திருவிழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

Leave a Reply