மீன்பிடிக்க சென்ற மீனவரின் காலை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை.

1 Min Read
மீனவர் ரவி

கும்பகோணம் அருகே அணைக்கரை மீனவ தெருவைச் சேர்ந்தவர் ரத்தினம் மகன் ரவி இவர் மீன்பிடி தொழிலாளி. வழக்கம் போல் கொள்ளிடத்தில் மீன்பிடிப்பதற்காக அங்குள்ள மதகு கட்டையில் உட்கார்ந்து கொண்டு தனது மீன்பிடி வலையின் மூலம் ரவி மீன்பிடித்து கொண்டிருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது தீடிரென கொள்ளிட ஆற்றில் இருந்த முதலை ரவியின் கால்களை கவ்வி கடித்து  தண்ணீரில் இழுத்து சென்றதது. திடீரென நடந்த இந்த நிகழ்வால் ரவியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆபத்தான நேரத்தில் அலறல் சத்தம் மட்டுமே ரவிக்கு கை கொடுத்தது.

அப்போது ரவியின் அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்த மீன்பிடி தொழிலாளர்கள் ரவியை முதலையிடமிருந்து பெரிய போராட்டத்திற்குப் பிறகு மெதுவாக மீட்டனர்.

பலத்த காயம் அடைந்த ரவியை‌‌108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு  அனுப்பி வைக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் இருப்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசு எச்சரித்துள்ளது.

Share This Article

Leave a Reply