கடலூர் வீட்டு தோட்டத்தில் புகுந்த முதலையால் அச்சமடைந்த கிராம மக்கள் .
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்களின் குடிநீருக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வக்கரமாரி கிராமத்தில் ஏறி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஏரியில் குடிநீர் மாசு படுவதாக கூறி அப்போதே உள்ள காலகட்டத்தில் முதலைகளை விட்டு சுத்தம் செய்து வந்தனர் .
இந்த நிலையில் பழைய கொள்ளிடம் ஆற்றில் பிடிக்கப்படும், முதலைகளை வனத்துறையினர் அதிகாரிகள் பிடித்து வந்து வக்ராமாரி ஏரியில் விட்டு செல்கிறார்கள் . அந்த முதலைக்கு இறையைத் தேடி அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வயல் , வீடு மற்றும் வீட்டு தோட்டங்களில் சென்று கால்நடைகள் ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை பிடித்து உண்ணுகிறது .
மேலும் சில சமயங்களில் மனிதர்களைப் பிடித்து முதலை வேட்டையாடி வருகிறது இதனால் பழையநல்லூர் ,
காட்டுக்கூடலூர் , நடுத்திட்டு , உள்ளிட்ட உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் கை, கால் இழந்தும். மரணங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிலர் உடல் இதுவரை கிடைக்க படுவதே இல்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் .

சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது வீட்டு தோட்டத்தில் நேற்று காலை சுமார் 9 அடி நீளமுள்ள140 கிலோ மதிக்கத்தக்க முதலை ஒன்று புகுந்துள்ளது. இதை பார்த்த அவர், இது குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் வனவர் பிரபு, வனக்காப்பாளர்கள் அன்புமணி, ஞானசேகர், அலமேலு மற்றும் வன ஊழியர் புஷ்பராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
பின்பு சம்பவ இடத்திற்க்கு வந்த சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு பீட் வனக்காப்பாளர் பிரபு, அன்புமணி, வன ஊழியர்கள் புஷ்பராஜ் ஆகியோர் முதலையை பிடித்து வந்து வக்ரமாரி ஏரியில் விட்டு சென்றனர். ஏரியில் முதலைகளை விடுவதால் மேலும் உயிரிழப்புகள் அதிகமாக ஆகக் கூடும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் .
Leave a Reply
You must be logged in to post a comment.