எண்ணெய் கசிவு விவகாரத்தை விசாரிக்க நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்..!

3 Min Read

சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள கடலில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மழை வெள்ளத்தின் போது மிதந்து வந்த எண்ணெய் கழிவுகள் வீடுகளிலும் படிந்தது. இந்த எண்ணெய் கழிவால் பொதுமக்களுக்கு உடலில் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்த நிலையில் எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பசுமைத் தாயகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் என்று நடைபெற்றது. நேரு நகர் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை பா.ம.க தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். முன்னதாக மருத்துவ முகாமுக்கு வந்த அன்புமணி ராமதாஸ் அங்கு அமைக்கப்பட்டு இருந்து முகாமில் டாக்டர் உடையுடன் அமர்ந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார். சிகிச்சை பெற வந்தவர்களிடம் எண்ணெய் கழிவால் உடல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

அன்புமணி ராமதாஸ்

மேலும் மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை, இருதய பரிசோதனை, நுரையீரல், தோல், கண், அக்குபஞ்சர், பல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் அன்புமணி ராமதாஸ் பேசும்போது கூறியதாவது; எண்ணூர் பகுதியில் எண்ணெய் மற்றும் ரசாயன கசிவுகளுக்கான காரணம் குறித்து அரசு இன்று வரை எந்த ஆய்வும் நடத்தவில்லை. இதனால் மனித மற்றும் கால்நடை வனங்களுக்கு மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற பேரிடர் காலத்தில் எண்ணெய் கசிவுகளை அகற்ற உரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இந்த எண்ணெய் கசிவு விவகாரத்திற்கு யார் காரணம் என ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அல்லது ஆணையத்தை அமைத்து விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். மும்பையில் முன்பு ஒரு முறை ஏற்பட்ட எண்ணெய் கசிவு விவகாரத்தில் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. ஆனால் எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரத்தில் கசிவு ஏற்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு அரசின் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அன்புமணி ராமதாஸ்.

மேலும் ரூபாய் 8.45 கோடி நிவாரணம் என்பது எந்த வகைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடாக இருக்காது. மத்திய மாநில அரசுகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைக்காமல் மீட்பு பணிகளில் இருந்து செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். பருவமழை காலகட்டத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பை தடுக்க போதிய பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். முகாமில் பசுமைத் தாயகம் அமைப்பு செயலாளர் அருள், பசுமை தாயகம் மாநில அமைப்பு செயலாளர் ராயபுரம் ராதாகிருஷ்ணன் பாமக, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி.எஸ் சபாபதி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம் பிரகாஷ், வடசென்னை மாவட்ட செயலாளர் வண்ணை சந்திtயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article

Leave a Reply