- பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் தெரு ராஜேந்திரன் – அன்பரசி தம்பதியரின் 16 வயது மகள் சுசிஷாலினி. இவர் பட்டுக்கோட்டை அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி சுசிஷாலினி கடந்த சில ஆண்டுகளாக தனது உடன் பிறந்த சகோதரரும், கராத்தே மாஸ்டருமான குலாஸ்டாலினிடம் கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாணவி
சுசிஷாலினி உலக சாதனை மேற்கொண்டார்.
மாணவி சுசிஷாலினி 2 டன் எடையுள்ள கார், ஜீப் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக 15 முறை தனது கை விரல்களில் ஏற்றி உலக சாதன படைத்தார். அப்போது பேருந்து நிலைய சாலையின் இருபுறங்களிலும் கராத்தே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூடிநின்று கைதட்டி உற்சாகமாக ஊக்கமளித்தனர்.
இந்த உற்சாகத்தின் ஊக்கத்திலேயே மாணவி சுசிஷாலினி இரண்டு டன் எடையுள்ள நான்கு சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக 15 முறை தனது கை விரல்களில் ஏற்றி உலக சாதனை படைத்தார்.
கின்னஸ் சாதனை படைத்த மாணவி சுசிஷாலினிக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போலீசார், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சால்வை அணிவித்து கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சாதனை படைத்ததற்காக சான்றிதழும், ஷீல்டும் மாணவி
சுசிஷாலினிக்கு வழங்கப்பட்டது.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/as-diwali-approaches-thanjavurs-diwali-sales-are-in-full-swing/
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கராத்தே மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்த மாணவி சுசிஷாலினியை தங்களது தோள்களில் தூக்கி தேசிய கொடியுடன் உற்சாகமாக கொண்டாடினர்.
இது குறித்து மாணவி சுசிஷாலினி கூறுகையில், நான் சின்ன வயதிலிருந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகின்றேன். அதில் ஒரு முயற்சியாக எனது கை விரல்களில் இரண்டு டன் எடையுள்ள நான்கு சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக 15 முறை ஏற்றி உலக சாதனை படைத்துள்ளேன்.
நான் இதற்கு முன்பு கடந்த ஆண்டு எனது வயிற்றில் மரப்பலகையை வைத்து 67 முறை இருசக்கர வாகனத்தை ஏற்றி உலக சாதனை படைத்துள்ளேன். நான் தொடர்ந்து சாதனை படைப்பேன் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.