16 வயது கொண்ட சிறுமியை 40 வயதுடைய நபர் திருமணம் செய்த நிகழ்வு

1 Min Read
கார்த்திக்

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் மாவட்டம்‌‌ பொதட்டூர்பேட்டையில்  மைனர் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி‌‌போக்சோ சட்டத்தில்  கைது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த 16 வயதான மைனர் பெண்ணை கானவில்லை என்று பொதடூர்பேட்டை காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் செய்தார்.

காவல்துறையினர்    வழக்கு பதிவு செய்து  விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவங்காடு சேர்ந்த கார்த்திக் (40) என்பவர் பொதடூர்பேட்டை காலனியில் தண்டுமாரியம்மன் கோயில் சீரமைப்பு பணிகள் செய்து வந்த போது ஏற்ப்பட்ட பழக்கத்தில் மைனர் பெண்ணுடன்  ஓட்டம் பிடித்தது உறுதிப்படுத்தி அவர்களை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில்  கோயில் சீரமைப்பு பணிகள் செய்து வந்த  கார்த்திக் சஜகாமாக பேசி நம்பவைத்து  கடத்திச் சென்று  பாலியல் பலாத்காரம் செய்ததாக  மைனர் பெண் அளித்த  புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கார்த்திக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share This Article

Leave a Reply