தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரக் தமிழ்நாடு என்ற பெயரிலான மலையேற்ற திட்டத்தை கைவிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கு..

1 Min Read
  • தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரக் தமிழ்நாடு என்ற பெயரிலான மலையேற்ற திட்டத்தை கைவிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 40 மலையேற்ற பயண திட்டத்தை அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
 

அந்த மனுவில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற பயணத்தை அனுமதித்தால் வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழகத்தில் 38 யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் மலையேற்றத்தை அனுமதிக்கும் போது, அதிக எண்ணிக்கையில் மனித நடமாட்டம் ஏற்படும் என்றும் அதன் காரணமாக விலங்குகள் உணவு தேடும் நடவடிக்கை இனப்பெருக்க நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனிதர்கள் மூலம் வன விலங்குகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும், மலையேற்றத்திற்கு செல்பவர்கள் எடுத்துச் செல்லும் உணவுகளின் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் வனப்பகுதியில் விட்டு திரும்பக்கூடும் என்பதால் வனம் மாசடைய வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாகவும் விலங்குகள் காயம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/3-trucks-collided-one-after-the-other-near-kummidipoondi/

வனப்பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலையேற்ற பயணத் திட்டத்தை கைவிடும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

Leave a Reply