பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த கார், ஈச்சனாரி அருகே நடு ரோட்டில் திடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட பொள்ளாச்சி ஆனைமலையை சேர்ந்த பெண் உட்பட நான்கு பேர் ஜவுளி எடுப்பதற்காக கோவை நோக்கி டஸ்டர் காரில் வந்துள்ளார். அப்போது ஈச்சனாரி மேம்பாலம் அருகே வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வரத்துவங்கியுள்ளது.
இதனால் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை ஓரத்தில் நிறுத்திவிட்டு உள்ளே இருந்த அனைவரும் கீழே இறங்கினர். இதையடுத்து காரின் முன் பகுதியில் தீப்பிடித்து எரியத்துவங்கியதால், அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. சம்பவம் தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.
கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. காரின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள மின்சார அமைப்பில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு மின் கசிவினால் கார் தீ பிடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
ஓட்டுநர் உடனடியாக புகை வந்ததை கண்டறிந்து உடன் வந்தவர்களை இறக்கியதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தப்பித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.