சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காரை ஓட்டிய ஆந்திர எம்.பி., மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பித்து சென்ற மாதுரியை கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாகனத்தை கண்டுபிடித்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் அவரிடம் விசாரணை செய்து பின்னர் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை பெசன்ட் நகர் ஊரூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது சூர்யா என்பவர் சாலையோரமாக பிளாட்பாரத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த நிலையில்,

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சூர்யா மீது ஏறியது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.