பாபநாசம் அருகே காவிரி அரசலாறு தடுப்பணை தலைப்பு பகுதியில் 146-கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலம்.

1 Min Read
  • தடுப்பணை பலகையின் மேலே உள்ள தடுப்பு இரும்பில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேட்டுத்தெரு காவிரி அரசலாறு தடுப்பணை தலைப்பு பாலம் நபார்டு வங்கி உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் திட்ட நிதியின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு 146-கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் 7-வது தடுப்பணை பலகையின் மேலே உள்ள தடுப்பு இரும்பில் திடீர் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. 10-நாட்களுக்கு மேலாக தடுப்பு பலகையில் மேலே உள்ள‌ இரும்பு பகுதியில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/again-100-allotment-will-be-implemented-by-bamaka-founder-dr-ramadoss/

மேலும் அரசலாறு தலைப்பில் கட்டப்பட்டுள்ள கதவணையில் சில மாதங்களிலேயே கதவணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் ஏக்கர் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article

Leave a Reply