சேலம் ஜலகண்டாபுரத்தில் வசித்து வருபவர் சுந்தரராஜ், இவருக்கு 32 வயதாகிறது. இவர் ஒரு நெசவு தொழிலாளி. இவரின் மனைவி பெயர் நிவேதா, இவருக்கு 27 வயதாகிறது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 17-ந் தேதி சுந்தர்ராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால், விடிகாலை நேரத்தில் ஒப்பாரி வைத்து கத்தி கூச்சலிட்டார் நிவேதா. சுந்தர்ராஜின் அப்பாவுக்கும் போனை செய்து விஷயத்தை சொன்னார். உங்கள் மகன் தற்கொலை செய்துகொண்டார் என்று சொன்னதுமே அதிர்ந்துபோன சுந்தரராஜ் பெற்றோர் கதறிக்கொண்டே ஓடிவந்தனர். மகனின் சடலத்தை கண்டு வெடித்து கண்ணீர்விட்டனர். அப்போதுதான், சுந்தர்ராஜின் கழுத்தில் காயங்கள் இருப்பதை பார்த்தனர்.
இதையடுத்து, சந்தேகமடைந்த சுந்தர்ராஜின் அப்பா, ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். அவர்களும் சுந்தரராஜின் கழுத்தில் கிடந்த காயங்களை கண்டனர். அந்த நேரம்பார்த்து நிவேதா, தரையில் உருண்டு புரண்டு அழுது கொண்டிருந்தார். ஆனால், போலீசாரின் முதல் விசாரணையே நிவேதாதான்.
கேள்வி கேட்கும்போதே உளற ஆரம்பித்துவிட்டார் நிவேதா. பிறகு, அங்கேயே தனி அறையில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். கணவனை கொன்றது தான்தான் என்று நிவேதா ஒப்புக் கொண்டார். இதற்கு காரணம் கள்ளக்காதல் என்பதையும் போட்டுடுடைத்தார். இதையடுத்து, ஆன் தி ஸ்பாட்டிலேயே போலீசார் நிவேதாவை கைது செய்தனர்.
இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தோழி வித்யா, கள்ளக்காதலன் தினேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இப்போது போலீசார் 3 பேரிடமும் தனித்தனியாகயாக விசாரணையை நடத்தினர். நிவேதாவுக்கும், தினேசுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது எப்படி? எத்தனை காலமாக இவர்களது கள்ள உறவு நீடிக்கிறது? எப்படி சுந்தர்ராஜனை கொன்றார்கள்? என்ற விசாரணை நடந்தது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
நிவேதா ஒரு டீச்சராம். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, பெங்களூருவில் வேலை பார்த்து வந்துள்ளார் சுந்தர்ராஜ். ஆனால், அங்கே சாப்பாடு பிரச்சனையால் அவருக்கு அல்சர் வியாதி ஏற்பட்டுள்ளது. அதனால் சொந்த ஊரிலேயே தறித்தொழிலில் ஈடுபட்டுள்ளார். நிவேதாவும், அங்குள்ள தனியார் பள்ளியில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அப்போது அவரது பள்ளித்தோழி வித்யா அறிமுகமாகி உள்ளார்.
அந்த வித்யா மூலம் அறிமுகமானவர்தான், ஆவடத்தூர் அருகே கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த தினேஷ். அதுவும் 4 மாத காலத்துக்கு முன்புதான் அறிவுமுகமாகி உள்ளார். 4 மாத கள்ளக்காதலிலேயே தினேஷூடன் நெருங்கிவிட்டார் நிவேதா
பழகிய நாளில் இருந்தே எந்நேரமும் போனில் இருந்துள்ளார் நிவேதா. இதை அறிந்த சுந்தர்ராஜ், மனைவி நிவேதாவை கண்டித்துள்ளார். போனையும் பறித்துக்கொண்டுள்ளார். இதனால், தினேஷூடன் பேச முடியாமல் தவித்தார் நிவேதா. மேலும், கள்ளக்காதல் விவகாரம் கணவனுக்கு தெரிந்து விட்டதால், அவரை தீர்த்துக்கட்டவும் முடிவு செய்துள்ளார். தினேஷ், வித்யாவிடம் கச்சிதமாக பிளான் போட்டு தந்துள்ளார். கடந்த ஆடி 1க்கு மாமனார், மாமியார் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். இதை பயன்படுத்திக்கொண்ட நிவேதா, 17ம் தேதி இரவு, கணவனுக்கு நிறைய தூக்க மாத்திரைகளை தந்து தூங்க வைத்துள்ளார். அதுவரை காதலன் தினேஷ் காத்திருந்தாராம்.
பிறகு, காதலன் தினேஷையும், தோழியையும் வீட்டிற்குள்ளே வரவழைத்துள்ளார். காதலன் வந்ததும், சுந்தர்ராஜின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்தது போல் இருவருமே சேர்ந்து, தூக்கில் கட்டி சடலத்தை தொங்கவிட்டுள்ளனர். அதிகாலை 4 மணிக்கு மாமானாருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னாராம் நிவேதா. இந்த வாக்குமூலங்கள் நடந்து முடிந்த நிலையில், சுந்தர்ராஜின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.
அதில், தூக்கில் தொங்கியது போல் கழுத்து இறுகாமல், மூச்சுத்திணறி இறந்திருப்பது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, சம்பவத்தன்று, தினேஷூடன் செல்போனில் நிவேதா அதிக நேரம் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பள்ளித்தோழிக்கு இதில் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அந்த விசாரணையும் நடக்கிறது. டீச்சர் இப்போது ஜெயிலில் உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.