திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சக்கரவர்த்தி இவருடைய மகன் 13 வயது சிறுவன் சூரிய பிரகாஷ் நாட்றம்பள்ளி ராமகிருஷ்ணா மடத்தில் 7 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில் நேற்று திடீரென சூர்யா பிரகாஷிற்கு உடல் சோர்வு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். பிறகு அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது .
இதனால் வருத்தம் அடைந்த அவரது தந்தை சூர்யா பிரகாஷை நாயன்செருவு பகுதியில் இயங்கி வந்த தனியார் சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார் .
அங்கு சிகிச்சை மாயம் நடத்திவரும் கோபிநாத் என்பவர் , சூர்யபிரகாஷுக்கு இரண்டு ஊசிகள் செலுத்தி அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளார் .
ஆனால் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து அவரது பெற்றோர் அவரை உடனடியாக நாட்ரம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக சிறுவன் சூர்யா பிரகாஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுயநினைவை இழந்துள்ளான்.
மேலும் அவரை நாட்றம்பள்ளி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் , சூர்யப்ரகாஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .
இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யப்ரகாஷின் உறவினர்கள் நாயன்செருவு பகுதியில் இயங்கி வந்த தனியார் சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளித்த கோபிநாத் தான் சிறுவன் இறப்புக்கு காரணம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி நகர் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான திம்மம்பேட்டை காவல் துறையினர் அந்த சிகிச்சை மையத்தை மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரிகளின் துணையோடு ஆய்வு மேற்கொண்டார் .

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் கிளினிக் நடத்திவந்த கோபிநாத் முறையான மருத்துவ படிப்பு முடிக்காத போலிமருத்துவர் என்று தெரியவந்துள்ளது .
திருப்பத்தூரை சேர்ந்த கோபிநாத் நாயன்செருவு பகுதியில் இரண்டு அடுக்கு கட்டிடத்தில் இயங்கி வரும் அவரது மருத்துவமனைக்கு தினமும் வந்து, அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது .
பாதிக்கப்பட்ட பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் , போலீசார் கிளினிக்கை சோதனை செய்து, பெயர் பலகைகள், மருந்து சீட்டுகள், ஸ்டெதாஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், ஊசிகள் மற்றும் மருந்துகளை கைப்பற்றினர்.
மேலும் சட்டவிரோதமாக இயங்கிவந்த அந்த மருத்துவமனைக்கு மாரிமுத்து, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் (திருப்பத்தூர்) , மற்றும் போலீசார் சீல் வைத்தனர்.
இது குறித்து திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பேசுகையில் திம்மாபேட்டை போலீஸார் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். இருப்பினும், விரிவான விசாரணைக்குப் பிறகு, குற்றவாளி கோபிநாத் மீது ஐபிசியின் 304 (2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் .
Leave a Reply
You must be logged in to post a comment.