விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகாலிங்கம், கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடி சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திற்கும், அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் ஆகியோர் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், கண்டாச்சிபுரம் பொன்னுரங்கம் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கும், கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் இருந்த ஜோசப்ரவி கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், பெரியதச்சூர் ஞானகுமார் விக்கிரவாண்டிக்கும், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்திற்கும், மயிலம் ஆனந்தராசன் ஒலக்கூருக்கும், அவலூர்பேட்டை விஸ்வநாத் பிரம்மதேசத்திற்கும் இவர்கள் உள்பட 46 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோமதி கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கும், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வானூர் போலீஸ் நிலையத்திற்கும், வானூர் முத்துலட்சுமி மரக்காணத்திற்கும், விழுப்புரம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பொற்கொடி, பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராணி ஆகியோர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், செஞ்சி மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்த தமயந்தி திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், அங்கிருந்த இளவரசி செஞ்சி மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், நெடுஞ்சாலை ரோந்து கண்காணிப்பு அறையில் இருந்த அறிவழகி கோட்டக்குப்பம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் ஆகிய 8 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பிறப்பித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.