இறந்த சடலத்தை பலாத்காரம் செய்துள்ளான் ஒரு கொடியவன்..
அதற்கு பிறகு நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, வெலவெலத்து போயுள்ளனர் ராஜஸ்தான் மக்கள்..!! சமீபகாலமாகவே வடமாநில கொலைகள் நம்மை அதிர வைத்து வருகின்றன.
இப்போதெல்லாம் கொலைகளை செய்தால், அந்த சடலத்தை, துண்டு துண்டாக கொலையாளிகளே வெட்டிவிடுகிறார்கள். அதேபோல தங்கள் வீட்டிலுள்ள ஃப்ரிட்ஜ்களில், வெட்டப்பட்ட உடல்பாகங்களை பாத்திரங்களில் வைத்து கொள்வதும், அதிகமாகிவிட்டது.

உடல்பாகங்கள்:
ஒரே குடும்பத்தில், ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக வாழ்ந்து வந்த உறவுகளையே, கொடூரமாக கொல்வது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . குறிப்பாக, டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தாவை, அவரது காதலன் அப்தாப் படுகொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவத்தின் அதிர்ச்சியை தொடர்ந்து,
மும்பை, ராஜஸ்தான் உள்பட நாட்டின் சில இடங்களில் இப்படியான கொடூரங்கள் நடந்து, பகீரை கிளப்பின.
இதோ இன்னொரு சம்பவம் அதே ராஜஸ்தானில் நடந்துள்ளது..
அங்குள்ள உதய்ப்பூர் பகுதியில் 9 வயது சிறுமி, திடீரென மாயமானார்.

அதிர்ச்சி :
கடந்த 29-ந் தேதி காணாமல் போயுள்ளார்..
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தும் மகளை கிடைக்காமல் போலீசுக்கு போனார்கள்..
ஒருவார காலமாகவே சிறுமியை தேடிவந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள மவுலி பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, தகவல் கிடைத்துள்ளது. அதனால், அங்கு சென்று பார்த்தபோதுதான், ஒரு பிளாஸ்டிக் பைக்குள் சிறுமியின் உடல் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது.
அதனை கைப்பற்றி போலீசார் விசாரணையை துவங்கினர். அப்போதுதான் கமலேஷ் என்பவரின் பெயர் அடிபட்டது.
இவருக்கு 20 வயதாகிறது, இவர் ஏன் சிறுமியை கொல்ல வேண்டும்? என்பது குறித்த விசாரணை துரிதமானது. இந்த சிறுமிக்கு 9 வயதுதான் ஆகிறது. பழங்குடியின இனத்தை சேர்ந்தவர், மார்ச் 29 அன்று சிறுமி கடத்தப்பட்டிருக்கிறார் , ஆனால், அவர் உடல் பாகங்கள் ஏப்ரல் 1ம் தேதி இரவு மவ்லி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அது ஒரு பாழடைந்த வீடு என்கிறார்கள் .

அந்த வீட்டிற்குள்தான் சடலத்தை வெட்டி உடல்பாகங்களாக பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்திருந்திருக்கிறான் குற்றவாளி..
அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உள்ளூர்வாசிகள் போலீசுக்கு போனதால்தான், இந்த விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்தது.
காமுகன்:
சிறுமியின் பக்கத்து வீட்டில்தான் கமலேஷ் வசித்து வந்துள்ளார்.. தினமும் சிறுமியை கவனித்து வந்தநிலையில், திடீரென ஒருநாள் கடத்தி சென்று, பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. பலாத்காரம் செய்தபோதே சிறுமியின் உயிர் போய்விட்டதாம்.
ஆனால், இறந்த உடலையும் அந்த காமுகன் பலாத்காரம் செய்துள்ளதாக அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, சிறுமியின் தலையை துண்டித்து, உடலை மொத்தம் 10 துண்டுகளாக வெட்டியுள்ளான்..
இதில் கொடுமையென்னவென்றால், கமலேஷின் பெற்றோரும் அவனுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்றும் அந்த பகுதி மக்கள் போலீசுக்கு சொல்லி உள்ளார்கள், இதையடுத்து, கொலையாளியையும், அவரது பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால், பழங்குடியின சிறுமி பாலியல் பலாத்காரம், கொடூரகொலை செய்யப்பட்டதற்கு எதிராக, பொதுமக்கள் கொந்தளித்துவிட்டனர். கமலேஷூக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில், பழங்குடியின சமூகத்தினர் மொஹ்தா பூங்காவில் ஒன்று கூடி, முழக்கங்களை எழுப்பியவாறு உதய்பூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றபோது, பொதுமக்களும் அவர்களுடன் திரண்டு வந்தனர்..

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியினர் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி ஒன்று திரண்டுவிட்டனர். காரணம், கடந்த 2 வருடங்களில் பழங்குடியினருக்கு எதிராக இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றன. அதனால், இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். இப்போதைக்கு இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது..
இதன் தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்று தெரியவில்லை , ஆனால், தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் அதிருப்திக்கும், அதிர்ச்சிக்கும் பொதுமக்கள் ஆளாகி இருப்பதாக தெரிகிறது.
எனவே, நடக்க போகும் தேர்தலில் இதன் தாக்கம் அதிகமாகவே எதிரொலிக்கும் என்கிறார்கள்.
மனிதர்களாகிய நாம் மற்றவர்களை மதிக்க வேண்டும்.
பகுத்தறிவுடன் வாழவும் நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மனிதர்களாகிய அவர்கள் இவற்றுடன் பிறந்தவர்கள் என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளை புறநிலையாகப் பார்த்து,
அவற்றைத் தீர்ப்பதற்கான பிரச்சினைகளின் மூலத்தைக் கண்டறியக்கூடிய சுதந்திரமான மற்றும் வலிமையான மனிதர்களாக குழந்தைகளை வளர்க்கவும்.
அவர்கள் எந்த ஆடைகளை அணிந்தாலும், அவர்கள் அழகாகவும் மரியாதையுடனும் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். மற்றவர்களின் உரிமைகளை மதிக்க நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள், ஏனென்றால் அது மனிதனாக இருப்பதில் ஒரு முக்கிய பகுதியாகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.