விழுப்புரம் மாவட்டம், அடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட ஒன்பது எலுமிச்சை பழம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய் விலை போன அதிசயம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாங்கி சாப்பிட்ட வினோத திருவிழா..
விழுப்புரம் மாவட்டம், அடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது.

அப்போது கருவறையில் வேல் மட்டுமே உள்ள இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் இறுதிநாளன்று பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் உற்சவ காலங்களில் தினமும் வேலில் சொருகப்படும் 9 நாள் எலுமிச்சம் பழங்களை இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது.

இந்த எலுமிச்சை பழத்தினை குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் நம்பப்படுகிறது. இதனால் ஏல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர்.
இடும்பன் பூஜைக்கு பிறகு கோயிலின் தலைமை பூசாரி ஆணி பதித்த காலனியில் நின்று ஏலத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து பூசாரிகள் ஏலத்தை நடத்தினர்.

குழந்தை பாக்கியம் தரக்கூடிய முதல் உற்சவ எலுமிச்சை பழம் 50,500 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. அப்போது குழந்தை பாக்கியம் வேண்டி தி. கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த அருள்தாஸ் கனிமொழி தம்பதியினர் ஏலம் எடுத்தனர்.
எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றுக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு புடவையின் முந்தானையில் எலுமிச்சை பழத்தினை பெற்று கொண்டனர். அப்போது இறுதியாக இடுமனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டு குழம்பு கலந்த சாதம் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த வினோத திருவிழாவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என்று முழுக்க மட்டும் முருகனை வழிபட்டு சென்றனர்.
முருகன் கோவில் வேலில் சொருகப்பட்ட ஒன்பது எலுமிச்சை பழம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய் விலை போன அதிசயம் சம்பவம் அந்த பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.