பழனி முருகன் கோவிலில் 80 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தங்கள் அளிக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம், அடுத்த பழனி முருகன் கோவிலில் கடந்த சில நாட்களாக பிரசாதங்கள் மற்றும் பஞ்சாமிர்தம் என காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையிலான பாதுகாப்பு குழுவினர் அனைத்து கடைகள் மற்றும் தேவஸ்தான பிரசாதங்கள் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆய்வு செய்த பிரசாதங்களை ஆய்வகத்திற்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தேவஸ்தான நிர்வாகமானது தைப்பூசத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரக்கூடும். ஆகையால் அதிகளவில் பஞ்சாமிர்த தயாரிப்பு செய்து வைத்துள்ளதாகவும், பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தும் பஞ்சாமிர்த விற்பனை அதிகளவில் ஆகாததால் பஞ்சாமிர்தம் தேக்கம் அடைந்து விட்டது.

இதனால் விற்பனை செய்யப்பட்ட சில பிரசாதங்களில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அதனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பழநி அருகே உள்ள கள்ளிமந்தயம் கோசாலையில் குழி தோண்டி 80,000 மேற்பட்ட பஞ்சாமிர்த டப்பாக்கள் அளிக்கப்பட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பதை தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.