கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது இந்த தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜுவ்குமார் அறிவித்து இருந்தார். பாரதிய ஜனதா கட்சி 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் 223 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 209 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. கடந்த 15 நாட்களாக பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டனர் இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் பணியில் 4 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மேலும் 84,000 மாநில போலீசார் 58 ஆயிரம் சிஏபிஎப் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பெரும்பாலும் கருத்துக்கணிப்புகள் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே வெளியாகி உள்ளது தொங்கு சட்டமன்றம் அமைப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த நேரத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்கள் தான் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வார்கள் என்றும் பேசப்படுகிறது. அமைதியான முறையில் நடந்து முடிந்தது தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிறகு தான் கர்நாடகாவில் யார் ஆட்சி பிடிக்க போகிறார் என்று தெரியவரும்.
Leave a Reply
You must be logged in to post a comment.