பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள் – பல்வேறு கட்சிகள் நினைவஞ்சலி..!

2 Min Read

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட வருவாய் அலுவலர், அதிமுக, ஓபிஎஸ் அணி என பலர் அண்ணா இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -
Ad imageAd image

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை ஒட்டி அவரது இல்லத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவை தென்னாட்டு காந்தி என அழைக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள்

அந்த வகையில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்டோ மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் தேரடி பெரியார் அருகில் இருந்து 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் மாவட்ட செயலாளர் சுந்தர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஊர்வலமாக காந்தி சாலை, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை வழியாக தாலுக்கா அலுவலகம் வரை மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாள்

இதை தொடர்ந்து அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் மாநகராட்சி முன்பு அமைந்துள்ள அண்ணா சிலை மற்றும் அவரது இல்லத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஓ.பி.எஸ் சார்பில் மாவட்ட செயலாளர் ரஞ்சித்குமார் தலையிலான நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் என பலர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

Share This Article

Leave a Reply