பெண்கள் காவல்துறையில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கொடி அசைத்து துவக்கி வைத்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் துவங்கிய இந்த மாரத்தான், ரேஸ்கோர்ஸ் வழியாக அண்ணா சிலையை அடைந்து ஆயுதப் படை மைதானத்தில் முடிவடைந்தது.

5 கிமீ தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பல்வேறு பெண் காவலர்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மாநகர காவல் தலைமையிட துணை ஆணையர் சுகாசினி, மாநகரத் துணை காவல் ஆணையர் சந்திஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.