சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பார்வையாளர்கள் உயிரிழந்த சம்பவம்.

1 Min Read
  • ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6, 2024) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6, 2024) இந்திய விமானப்படையின் (IAF) விமானத்தின் வீரம் மற்றும் சூழ்ச்சித் திறனை வெளிப்படுத்தும் ஒரு கண்கவர் வான்வழி காட்சி சென்னைவாசிகளின் இதயங்களைக் கவர்ந்தது. ரஃபேல் உள்ளிட்ட விமானங்கள், கர்ஜனை.

சூப்பர்சோனிக் போர் விமானங்களான ரஃபேல் உட்பட சுமார் 50 விமானங்கள் எரிப்பு மழை பொழிந்தன. ஹெரிடேஜ் விமானம் டகோட்டா மற்றும் ஹார்வர்ட், தேஜாஸ், SU-30 மற்றும் சாரங் ஆகியவையும் வான்வழி வணக்கத்தில் பங்கேற்றன.

- Advertisement -
Ad imageAd image

சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பார்வையாளர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு என பாஜக மாநில அமைப்பாளர் எச். ராஜா பேட்டி.

தஞ்சாவூரில் நடைபெற்ற பாஜக தெற்கு மாவட்ட உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் பார்க்கச் சென்ற 5 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் 250க்கும் அதிகமானோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் குடிநீர் ஏற்பாடு செய்யப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் தமிழக அரசு தோல்வியுற்றுள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. அரசு செய்த தவறைத்தான் சுட்டிக் காட்டுகிறோம். தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.


கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/d-m-k-is-secluded-on-the-river-bank-near-thanjavur-celebrity-body-did-he-fall-and-die-police-investigation/

தமிழகத்தில் கஞ்சா தவிர ஹெராயின் போன்ற போதைப் பொருள்களைப் பிடிப்பதற்கு தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய புலனாய்வு அமைப்புதான் நடவடிக்கை எடுக்கிறது எனவும் தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply