தஞ்சாவூர் மாவட்டம், அடுத்த வளம்பக்குடியில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு 25-க்கும் மேற்பட்டோர் இன்று (புதன்கிழமை) காலை பாத யாத்திரையாக நடந்து சென்ற போது அவர்கள் மீது சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அடுத்த கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த பக்தர்கள் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரையாக,
தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடி, திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியது.

அதில், அதே ஊரைச் சேர்ந்த சின்னையன் மகன் முத்துசாமி (60), கார்த்திக் மனைவி மீனா (26), முருகன் மனைவி ராணி (37), ரமேஷ் மனைவி மோகனாம்பாள் ஆகிய 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய 2 பேரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக செங்கிப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply
You must be logged in to post a comment.