கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த தாசரபுரம் பகுதியில் வசிப்பவர் முருகதாஸ். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் பத்தாம் தேதி முருகதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மகளான திலகா அருகிலுள்ள டேனிஷ் மிஷன் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து படித்து வந்தார், தற்போது பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் தந்தை இறந்த போதும் அவரது இறப்பின் துக்கத்திலும் பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மாணவி திலகா
இந்த நிலையில், இன்று ஆங்கில தேர்விற்கு தந்தையின் இழப்பையும் பொறுப்படுத்தாமல் அவரை கட்டி அணைத்தபடி அழுதுவிட்டு, பொதுத்தேர்வுக்கு மாணவி திலகா சென்றார். அவரை உறவினர்கள் கட்டித்தழுவி அழுது தேர்வினை நன்றாக எழுத வேண்டும் என கூறி அனுப்பி வைத்தனர். இறப்பில் அவரைப் பிரிந்து அழுது புலம்பி மாணவி தேர்வுக்கு சென்ற காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.
இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு வெளியானதை எடுத்து திலகா 428 மார்க் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிகழ்வு பள்ளியில் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.