தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு ஜே.என் 1 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பரவுவதைத் தடுப்பதற்கும் மெதுவாக்குவதற்கும் சிறந்த வழி, நோய் மற்றும் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றி நன்கு அறிந்திருப்பதுதான். மற்றவர்களிடமிருந்து குறைந்தது 1 மீட்டர் இடைவெளியில் தங்கி, சரியாகப் பொருத்தப்பட்ட முகமூடியை அணிந்து, உங்கள் கைகளைக் கழுவுதல் அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான தேய்த்தல் ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் உங்களையும் மற்றவர்களையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும். உங்கள் முறை வரும்போது தடுப்பூசி போட்டு, உள்ளூர் வழிகாட்டுதலைப் பின்பற்றவும். இருமல், தும்மல், பேசும் போது, பாடும்போது அல்லது சுவாசிக்கும் போது, பாதிக்கப்பட்ட நபரின் வாய் அல்லது மூக்கிலிருந்து சிறிய திரவத் துகள்களில் வைரஸ் பரவும். இந்த துகள்கள் பெரிய சுவாச நீர்த்துளிகள் முதல் சிறிய ஏரோசோல்கள் வரை இருக்கும்.

சுவாச ஆசாரத்தை கடைப்பிடிப்பது முக்கியம், உதாரணமாக முழங்கையை மடக்கி இருமல், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் குணமடையும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 2019 -ல் முதல் முதலாக சீனாவில் கொரோனா தொற்று உருவானது. இதற்குப் பிறகு கொரோனா வைரஸ், ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் என பல வகையான திரிபுகள் உலகின் பல்வேறு நாடுகளில் பரவின. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகுவதற்கு பல வகை தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. அதற்குப் பிறகு தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில் சமீப காலமாக புதிய வகை கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகை கொரோனா தொற்று ஜே.என் 1 சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவின் முதல் முதலாக கேரளாவில் இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் முழு விவரம் தெரிய வர சில நாட்கள் ஆகும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் திருச்சி, கோவை, மதுரை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 4 பேருக்கு இந்த புதிய தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 பேரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா தொற்று உறுதியென கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா ஜே என்1 வகை கொரோனா பரவல் தொடங்கியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.