2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் 22-ம் ஆண்டு நிறைவை கண்டிருக்கும் இன்றைய நாளில் , மற்றுமொரு பெரிய பாதுகாப்பு மீறல், சம்பவமாக புதன்கிழமை அன்று மக்களவைக்குள் நுழைந்த இரண்டு நபர்கள் புகை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
பார்வையாளர்களின் அரங்கில் அமர்ந்து அந்த இரண்டு நபர்கள் , திடீரென்று தங்கள் காலணிகளில் பதுக்கி வைத்திருந்த புகை குண்டுகளை வெடிக்க செய்தனர் .
அவர்கள் மேசையிலிருந்து மேசைக்கு குதிப்பதை தொலைக்காட்சி காட்சிகள் காட்டியது, மேலும் அவர்கள் பாராளுமன்றத்தை மைய பகுதியை குறிவைத்து சென்றதும் நேரலையில் தெளிவாக தெரிந்தது .
பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டக்காரர்கள் என்றும் , அவர்கள் ‘தன ஷாஹி நஹி சலேகி’ (சர்வாதிகாரம் ஏற்றுக்கொள்ளப்படாது) என்ற கோஷங்களை எழுப்பியவாறு , புகை குண்டுகளை வெடிக்க செய்ததாகவும் தெரிவித்தனர் .
மேலும் இரண்டு எதிர்ப்பாளர்கள், லத்தூரிலிருந்து (மகாராஷ்டிரா) அமோல் என்ற ஆணும், ஹிசார் (ஹரியானா) நீலம் என்ற பெண்ணும், பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் உள்ள போக்குவரத்து பவனுக்கு அருகில் பதுங்கி கொண்டிருந்த இருவரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர் .
லோக்சபாவிற்குள் நுழைந்த இருவரின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை அவர்களை கைது செய்த பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
சபை நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய பாஜக எம்பி ராஜேந்திர அகர்வால், பார்வையாளர்கள் கேலரியில் இருந்து ஒருவர் விழுந்ததையும், அதே நேரத்தில் மற்றொரு நபர் மேசை மீது குதிப்பதையும் பார்த்ததாகக் கூறினார். “அவர்களில் ஒருவர் தனது காலணியில் இருந்து புகை வெளியேறும் ஒன்றை எடுத்தார். பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களைப் பிடித்தனர், அவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன, எந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதைப் கண்டறிய வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.
இதுகுறித்து பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் , தற்போதைக்கு, பொது பார்வையாளர் பாஸ்யை பெற்ற நபர்கள் யார் என்பதை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம் .
கட்டிடத்தின் உள்ளே பாதுகாப்பு சோதனைகள் மற்றும் ஸ்கேனர்கள் உள்ளன. இருப்பினும், இந்த நபர்கள் புகை குச்சிகளை ஏந்தி, மக்களவைக்குள் புகுந்துள்ளனர் . தற்போது அவர்கள் நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். என்று தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.