- முகமது நிஷாத், அவரது மனைவி நஸ்ரியா மற்றும் அவர்களது கூட்டாளிகள், மற்றொரு வீட்டு உதவியாளர் மற்றும் நண்பர்கள் ஆகியோரால் மூன்று மாதங்களாக அந்த சிறுமி தொந்தரவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் மைனர் பணிப்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் போஸ்ட்மார்ட்டம் தொடர்பான முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பல அதிர்ச்சி அளிக்கும் முடிவுகள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1. அந்த சிறுமியிடம் உடல் முழுக்க கடுமையான காயங்கள் இருந்துள்ளன. முதுகில் காயங்கள் இருந்துள்ளன.
2. முதுகிலும், கைகளிலும் அயர்ன் பாக்ஸ் வைத்து தேய்த்த காயங்கள் உள்ளன.
3. உடல் முழுக்க பல இடங்களில் சிகரெட் காயங்கள் இருந்துள்ளன.
4. அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல்.. கடுமையாக வேலை வாங்கி கொடுமை செய்துள்ளனர். இரவு நேரத்தில் தூங்க கூட விடாமல் கடுமையாக கொடுமை செய்துள்ளனர். இதனால் அவரின் குடல் வெறுமையாக இருந்துள்ளது.
5. அவர் உடல் அழுகிப்போய் உள்ளது. பலியான பின் அவர் பாத்ரூமில் வைக்கப்பட்டதால் அவர் உடல் அழுகிப்போய் உள்ளது
சூடான இரும்பு மற்றும் சிகரெட் துண்டுகளால் ஏற்படுத்தப்பட்ட தீக்காயங்கள் அந்த சிறுமியின் உடலில் இருந்து உள்ளது. அந்த சிறுமி தஞ்சாவூரை சேர்ந்தவர். பழைய வாகனங்களை வாங்கி விற்கும் முகமது நிஷாத் மற்றும் நசியா தம்பதி வீட்டில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 வருடமாக அவர் அங்கே பணியாற்றி வந்துள்ளார்.
இந்த 1 வருடத்தில் கடந்த 4 மாதங்களாக அவர் கடுமையாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார், அமிஞ்சிக்கரை பகுதியில் உள்ள மேத்தா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. தீபாவளி , பொங்கலுக்கு கூட விடுமுறை தராமல் கொடுமை செய்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டில் மகனுக்கு வைத்திருந்த உணவில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டதாக அந்த சிறுமியை அடித்தே கொலை செய்துள்ளனர்.
தீபாவளியன்று சிறுமியை கொன்று குளியலறையில் போட்டுவிட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊதுபத்தி ஏற்றிவைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்ட நிலையில்.. ஒரு வாய் எடுத்து சாப்பிட்டதற்கு இப்படி கொடூரமாய் கொலை செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகள், முகமது நிஷாத் மற்றும் நசியாஎன அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/cleaners-working-in-the-corporation-ate-at-a-popular-non-vegetarian-restaurant-kannappa-in-thanjavur/
வீடு முழுக்க அகர்பத்தி ஏற்றிவைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளனர். சிறுமியின் உடலை தங்கள் கழிப்பறையில் விட்டுவிட்டு அந்த இரண்டு பேரும் உறவினரின் வீட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. முதலில் கொலையில் இருந்து தப்பிக்கவே முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் வழங்கறிஞர் சரண்டர் ஆவதே சரி என்று அறிவுரை செய்துள்ளார். இதையடுத்து இந்த மரணம் குறித்து அவரது வழக்கறிஞர் போலீசாருக்கு தகவல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.