குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை

1 Min Read
உயிரிழந்தவர்

பல்லடம் அருகே தினம்தோறும் இரவு நேரங்களில் சிலர் பகுதிகளில் மது அருந்துவது வழக்கம் இதனால் பெண்கள் குழந்தைகள் என அந்த பகுதியில் மாலை நேரங்களில் நடமாட்டம் இல்லாமல் போனது. அதேபோன்று நேற்று மாலை.பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டின் அருகே ஒரு நபர் மது அருந்தி இருக்கிறார்.மது அருந்திய நபரை  செந்தில்குமார் வயது 47 என்பவர் தட்டி கேட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகமாக செந்தில்குமாரை அந்த நபர் சரமாரியாக தாக்கியுள்ளார். அத்துடன் மோகன், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோரும் மது அருந்திய நபரை தட்டி கேட்டுள்ளனர். பேசிக் கொண்டிருக்கும்போது அந்த நபர் தான் மறைத்து வைத்துக் கொண்டிருந்த அருவாளை எடுத்து தாக்க ஆரம்பித்தார். இந்த தாக்குதலில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நான்கு நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் செந்தில்குமாரின் உடல் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 பேருடைய உடலை எடுக்க விடாமல் ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் நான்கு பேரையும் வெட்டிய நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

Share This Article

Leave a Reply