பீகார் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர், 100 கும் மேற்போட்டார் காயம்

4 Min Read

தில்லி-காமக்யா எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 க்கும் மேற்பட்ட பெட்டிகள் பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை இரவு தடம் புரண்டன.

- Advertisement -
Ad imageAd image

இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 4 பயணிகள் சம்பவ இடத்தில உயிரிழந்தனர் மேலும் 100 கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் . அவர்களில் 20 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் அடையாளங்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

23 பெட்டிகளை கொண்ட வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (North East Express train 12506 ) புதன்கிழமை காலை 7:40 மணிக்கு டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து கௌஹாத்தியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காமாக்யா ரயில் நிலையத்திற்கு தனது 33 மணி நேரப் பயணத்திற்காகப் புறப்பட்டது .

நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் இந்த ரயில் காமாக்யா ரயில் நிலையம் அருகே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது பயணிகளுக்கு ஒரு பெரிய சத்தம் கேட்டுள்ளது , கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் துரதிஷ்டவசமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது .

இந்த விபத்து குறித்து உள்ளூர்வாசி ஹரி பதக் என்பவர் கூறுகையில் “திடிரென்று தண்டவாள பகுதியில் ஒரு பயங்கர சத்தம் எழுந்தது ,கிராம மக்களாகிய நாங்கள் என்ன நடந்தது என்று பார்க்க விரைந்தோம்.அந்த சமயம் ரயில் தடம் புரண்டதையும், ஏசி பெட்டிகள் மிகவும் சேதமடைந்ததையும் நாங்கள் பார்த்தோம்” என்று கூறினார் .

உடனடியாக விபத்தை பார்த்த கிராம மக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் . தகவலின் பேரில் சம்பவ பகுதிக்கு விரைந்துவந்த ஜகதீஷ்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் சந்திர சிங் தலைமையிலான போலீசார் போலீசார் , மீட்புபடையினரை உஷார் படுத்தியுள்ளனர் .

மேலும் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், விபத்து காரணமாக மின்சார கம்பிகள் மற்றும் கம்பங்கள் மற்றும் ரயில் பாதைகள் சேதமடைந்துள்ளன. சில பெட்டிகள் சமநிலையை இழந்து கீழே விழுந்தாலும், அவை எதுவும் தலைகுப்பறை கவிழவில்லை அதனால் உயிரிழப்புகள் குறைவு என்று அவர் கூறினார். தொழில்நுட்பக் குழுவானது விபத்துக்கான காரணம் விவரங்களைத் தெரியப்படுத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார் .

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பிரேந்திர குமார் PTI செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் ரயில் பக்சர் நிலையத்திலிருந்து புறப்பட்டு அரா நோக்கிச் சென்ற அரை மணி நேரத்திற்குள் விபத்து ஏற்பட்டது. ரகுநாத்பூர் ரயில்நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது .

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் , “நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் 12506 – ஆனந்த் விஹாரிலிருந்து காமாக்யா வரை தடம் புரண்ட செய்தி எனக்குக் கிடைத்தது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் . உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் இனைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறோம் என்று பதிவு செய்துள்ளார் .

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர் மேலாண்மை மற்றும் சுகாதாரத் துறைகள், முடிந்தவரை பலருக்கு விரைவான நிவாரணம் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“பக்சர் மற்றும் போஜ்பூர் மாவட்ட நீதிபதிகளிடமும் சம்பவ இடத்தை விரைவில் அடையவும், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தியுள்ளேன். ஜகதீஷ்பூர் , ஷாபூர் துணை மருத்துவமனைகள் மற்றும் , போஜ்பூர் மாவட்டத்தில், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளனர். ரோஹ்தாஸ், பக்சர் மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார் .

ரயில்வே போலீஸ் படை இன்ஸ்பெக்டர் தீபக்குமார் செய்தியாளர்களிடம்
பேசுகையில் விபத்துக்கான கரணம் குறித்து தொழில்நுட்ப குழுவினர் விசரனை நடத்திவருவதாகவும் ,அதே சமயம் தடம் புரண்ட ரயிலிலிருந்து மீட்கப்பட்ட பயணிகளை அவர்கள் விரும்பிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார் .

Share This Article

Leave a Reply