தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கன மழையில் காசநாடு புதூர் கண்டிதம்பட்டு கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான முன் பட்ட குறுவை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி மிதக்கின்றன.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு இடி மின்னல் காற்றுடன் கனமழை பெய்தது இதில் காசநாடு புதூர் கண்டிதம்பட்டு ஆகிய கிராமங்களில் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் உள்ள முன்பட்ட குறுவை நெல் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதக்கின்றன சுமார் 300 ஏக்கர் பரப்பளவு நெல் பயிர்கள் முளைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள், எந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வடிகால் வாய்க்கால்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்த காரணத்தினால் மழைநீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் அறுவடை செய்யக்கூடிய நிலையில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பது மகசூல் இழப்பையும், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.