நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கணவாய்பட்டி பகுதியைச் சேர்ந்த அபினேஷ், பிலிப்பாகுட்டையைச் சேர்ந்த நித்திஸ்குமார், விக்னேஷ் ஆகியோர் ராசாப்பாளையம் அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றன.
மதியம் 1:30 மணியளவில் கணவாய்பட்டியில் இருந்து xL Super இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் பிலிப்பாகுட்டை நோக்கி சென்றுள்ளனர்.

கணவாய்பட்டி வளைவில் சென்ற போது பிரேக் கட் ஆனதால், சாலையோரம் சுமார் 20 அடி தொலைவில் உள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்தனர்.
பராமரிப்பு இல்லாத கிணற்றில் 15 அடிக்கு தண்ணீரும், 10 அடிக்கு சேறும் இருந்தது.
இதனை அறிந்த கணவாய்பட்டி பகுதியைச் சேந்த அபினேஷின் தந்தை குப்புசாமி, 38, மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த சரவணன், அசோகன், ஆகியோர் கிணற்றில் குதித்துள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ராசிபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு, ஒரு தீயணைப்பு வாகனத்தில் வந்த 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அபினேஷ், நித்திஸ்குமாரை உயிருடன் மீட்டனர்.
இருவருக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிரேன் உதவியுடன் 4 மணி நேரமாக தேடப்பட்டு வந்த நிலையில், மாணவர் உள்பட 4 பேரின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
சாலையோரம் உள்ள கிணற்றிற்கு தடுப்பு அமைத்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. சாலையோரம் கிணற்றுக்கு தடுப்பு அமைக்க கோரி பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது.
Leave a Reply
You must be logged in to post a comment.