ரம்ஜான் பண்டிகை என்றால் அசைவம் இல்லாமலா?அதுவும் ஆட்டுக்கறி மொத்தமாக வாங்க வேண்டும் எங்கே சந்தைகளில் தான்.அப்படி ஒரு சந்தை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்.

வாரந்தோறும் புதன்கிழமை அன்று ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம் அதன்படி நடைபெற்ற இந்தச் சந்தைக்கு குன்னத்தூர்,எறையூர் தியாகதுருகம்,சேந்தநாடு,ஆசனூர்,களமருதூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.அதுமட்டுமல்லாமல் பல ஊர்களில் இருந்தும் வருவார்கள். இந்த நிலையில் வரும் சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் உளுந்தூர்பேட்டை வார சந்தையில் ஆடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திருச்சி, சேலம், பெங்களூர், கடலூர், தேனி, கம்பம் மற்றும் பல பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். பின்பு ரகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆடும் 5000 முதல் 25 ஆயிரம் வரை விலை போனது சந்தை தொடங்கி இரண்டு மணி நேரத்தில் 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.