கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி ஜியாவுல்ஹக் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு 22 கொலை வழக்கில் ஈடுபட்ட 30 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு பெரிய அளவிலான சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏதுமின்றி அமைதி காக்கப்பட்டன. மேலும் கடந்த ஆண்டில் 226 திருட்டு குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதில் 172 குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். களவாடப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 2 கோடியே 44 லட்சத்து 89 ஆயிரத்து 832 ஆகும். அவற்றில் சுமார் 99 லட்சத்து 80 ஆயிரத்து 400 மதிப்பீலான சொத்துக்கள் மீட்கப்பட்டது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்ற 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ரவுடிகளுக்கான மோதல் கூலிப்படையினரால் கொலை செய்வது போன்ற செயல்கள் கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு தொடர்பாக 2341 மதுவிலக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2471 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விரைவில் அடைக்கப்பட்டனர். மேலும் தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 11 குற்றவாளிகளை மதுவிலக்கு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சாலை விதிகளை மீறிய குற்றத்திற்காக ரூபாய் 47 லட்சத்து 60 ஆயிரத்து நானூறு அபராதம் தொகை வசூலிக்கப்பட்டன. 77 மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 55 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 450 வழக்குகளில் 489 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 2155 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனை மற்றும் கடத்திய குற்றத்தில் ஈடுபட்ட 111 பேர் மீது 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து 129 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. கடந்தாண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் ஒரு குற்றவாளி ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதில் ஆறு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 27 குற்றவாளிகளை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட 498 குற்றவாளிகளின் மீது 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெருகிவரும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் குற்றம் தொடர்ந்து நடைபெறும் 4150 இடங்களில் கண்டறிந்து இவற்றில் 3550 இடங்களில் 6222 சி.சி.டி.வி கேமராகள் பொருத்தப்பட்டு கண்காணித்து வரப்பட்டதால் பெருமளவில் குற்றங்கள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குற்ற தடுப்பு மதுவிலக்கு மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.