தமிழகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தையொட்டி ஹலோ எப்.எம்.மில் 25 ஆம் தேதி அன்று நாள் முழுவதும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது.
தமிழகத்தில் ஹலோ எப்.எம்.மில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தையொட்டி வருகிற 25 ஆம் தேதி திங்கட்கிழமை நாள் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அதிகாலை 5 மணிக்கு கிறிஸ்துமஸ் பிறப்பின் நற்செய்தி என்ற தலைப்பில் ரெவரன்ட் டாக்டர் ஸ்பர்ஜன் கலந்து கொண்டு பேசுகிறார் எனவும், காலை 7 மணிக்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி இடம் பெறுகிறது எனவும் 10 மணிக்கு பாடகி காவியா, அஜித் நண்பகல் 12 மணிக்கு நடிகை மேகா, ஆகாஷ் மதியம் 2 மணிக்கு நடிகர் ஷாரிக் ஹாசன் இயக்குனர் அறன் பங்கேற்கின்றனர் எனவும், மாலை 4 மணிக்கு பாடகி ஸ்ரீ நிஷா, பாடகர் சாம் விஷால், இசையமைப்பாளர் செபாஸ்டின் உரையாடுகின்றனர் எனவும், மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் கலந்து கொள்கிறார் என்றும், இரவு 9 மணிக்கு நடிகர் குரு சோமசுந்தரம் பேட்டி ஒளிபரப்பாகிறது. முன்னதாக இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தமிழகத்தில் சிறப்பு ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழைக்கு பருவ நிலை மாற்றம் காரணமா? என்ற தலைப்பில் அலசப்படுகிறது. இதில் சூழலியல் ஆராய்ச்சியாளர் பிரகாஷ் தங்கவேல், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர். மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறப்பு தாறுமாறு தர்பார் நிகழ்ச்சியில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அத்தியாவசியமா? என்பது குறித்து அரசு மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி வழக்கறிஞர் அருள்மொழி மனிதவள மேலாண்மை நிபுணர் லட்சுமி எழுத்தாளர் சல்மா ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர். இதனையடுத்து இடம்பெறும் கதைப்பாடல் நிகழ்ச்சியில் பெத்தம்மா என்ற சிறுகதை ஒளிபரப்பாகிறது.

இது பற்றி கதையின் ஆசிரியர் கண்மணி ராசா தனது கருத்துக்களை கூற உள்ளார். இக்கதையின் சிறு பகுதி ஒன்று நாடக வடிவிலும் இடம்பெறும் நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு சண்டே கிராம போன் நிகழ்ச்சியில் நடிகர் எழுத்தாளர் பவா செல்லதுரை கலந்து கொண்டு, தனது அனுபவங்களை பகிரவிருக்கிறார். மாலை 4 மணி நிகழ்ச்சியில் இயக்குனர் சதீஷ் பிரபு மற்றும் நடிகர் ராஜாஜி பங்கேற்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.