ராமநாதபுரம் மாவட்டம்
மண்டபத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை தமிழருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 52வயதான அந்தோணி மார்க்ஸ் என்பவர் முகாமில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14.01.2022 அன்று முகாமில் அருகே வசிக்கும் 13 வயது சிறுமியை தனது வீட்டிற்கு தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் மண்டபம் காவல்துறையினர் அந்தோணி மார்க்ஸை போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, அந்தோணி மார்க்ஸை கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கை விசாரித்த விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இலங்கை தமிழர் அந்தோணி மார்க்ஸிற்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.