கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 900 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல் .தலைமை செயலாளர் பி.கே.ஜேனா தகவல் தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக, ரயில் விபத்தில் காயமடைந்த 900 பயணிகள் கோபால்பூரில் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் பாலசோரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்திருந்தார்.
சிக்னல் கோளாறு காரணமாக 2 ரயில்களும் ஒரே பாதையில் வந்து நேருக்கு நேர் மோதியதாக முதற்கட்ட தகவல்.விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர்.எனவும் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை என தெற்கு ரயில்வே அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.
சென்னையில் தயார் நிலையில் 3 மருத்துவமனையில் தயாராக உள்ளது என அரசு தெரிவித்துள்ளது. ஒடிஷா விபத்து காரணமாக மத்திய மாநில அரசுகள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை கருணாநிதி பிறந்த நாள் விழா இதற்காக தள்ளி வைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒடிஷா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு ரயில்களும் தமிழக ரயில் நிலையங்கள் வழியாக செல்வது குறிப்பிடத்தக்கது.சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10-12 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன.https://www.youtube.com/embed/k1gE8m2vibI?feature=oembed
அப்போது தடம் புரண்ட அதன் ரயில் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன. என்று தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதிக்குச் செல்வதாகத் தெரிவித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாயும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும்,” என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், “நாங்கள் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். நாளை காலையில் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்வேன்.https://www.youtube.com/embed/Xp_c8iYALbo?feature=oembed
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதும் உயிர் பிழைத்தவர்களுக்கு உதவுவதும்தான் இப்போதைய முன்னுரிமை,” என்று கூறியுள்ளார்.
ஒடிசாவில் நடத்த கோரமண்டல் ரயில் விபத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் சிக்கி இருப்பதாக தெரிந்தால் அவர்களின் விபரங்களை தெரிவிக்கவும் மற்றும் அவரச உதவிக்கும், புதுச்சேரி மாநில அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கீழ்க்காணும் தொலைபேசி எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளவும்: 1070, 1077,112, 0413-2251003, 2255996 இந்த அவசர காலமையும் 24 மணி நேரமும் (24 x7) இயங்கும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த பயனிகள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.