கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர், தண்ணீர் தொட்டியில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து தொட்டிக்குள் கீழே விழுந்து உள்ளார்.

இதனை பார்த்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மேஸ்திரி குமார் என்பவர் சத்தம் போட்டு படி சென்று உள்ளார். அவரும் அந்த தண்ணீர் தொட்டியில் இறங்கிய போது மயக்கம் அடைந்து கீழே விழுந்து உள்ளார்.
இந்த நிலையில் சக தொழிலாளர்கள் அவர்களின் உடல்களை மீட்டு இது குறித்து சரவணம்பட்டி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தொட்டிக்குள் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தனரா அல்லது மூச்சுக்காற்று குறைந்த காரணத்தால் உயிரிழந்தனரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர் அவர்கள் உயிரிழந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் உடையாம்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.