விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கல்குவாரியில் வெடி வைக்க பள்ளம் தோண்டிய போது திடிரென்று மண் சரிந்து விழுந்ததில் அதனுடன் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த மயிலம் அருகே உள்ள பெரும்பாக்கத்தில் டி.பி.எல் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. அந்த கல்குவாரியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய இருவரும் வழக்கம் போல் இன்று பணிக்கு வந்திருந்தனர்.

அப்போது கல்குவாரியில் இருந்து பாறைகளை எடுப்பதற்காக பள்ளம் தோண்டி வெடி வைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இருவரும் நின்றிருந்த பகுதியில் திடீரென எதிர்பாராத விதமாக திடிரென்று மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது இந்த மண் சரிவில் வெடி வெடிப்பதற்கான டிரில் போட்டு மருந்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.

அந்த மண் சரிவில் சிக்கிய 2 தொழிலாளர்களை அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்க முயன்றனர். எனினும் அவர்களை வெளியே எடுத்த போது 2 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து இந்த கல்குவாரியில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கல்குவாரியில் பணிபுரிபவர்களுக்கு போதிய பாதுகாப்பு உங்கரணங்கள் வழங்குவதில்லை என்றும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் டிஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.