நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக உள்ளது. இதை மாணவர்களும் பெற்றோர்களும்
https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவுகளை அறிய முடியாமலும், கல்லூரியில் சேர முடியாமலும் தவித்து வந்தனர்.
இச்சூழலில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 97.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டில், இதே நாளில் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளன. மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டம், மூன்றம் இடங்களை வழங்கும் நடைமுறையை இந்தாண்டு நீக்கவும் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்களிடையே தேவையில்லாத போட்டியை உருவக்கும் மனநிலையை தவிர்க்கும் பொருட்டு சிபிஎஸ்இ எந்த தகுதி பட்டியலையும் வெளியிடாது, என்றாலும் பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 0.01 சதவீத மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக உள்ளது.
மாணவர்களும் பெற்றோர்களும் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளத்தை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
https://testservices.nic.in/cbseresults/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm
https://cnr.nic.in/cbseresults/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm
https://cbseresults.nic.in/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm
அதில் மாணவர்களின் பதிவு எண், பள்ளி எண், நுழைவுச் சீட்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட இணைய தள முகவரிகளை க்ளிக் செய்தும், 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.