சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பெரிய அலையில் சிக்கியதால் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்பு குழுவினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
சென்னை மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிக ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடற்கரைக்கு வந்த சிறுவர்கள் பெண்கள் என அனைவரும் அலையில் விளையாடும் ஆர்வத்தினால் ஆபத்தான பகுதிகளுக்கு செல்கின்றனர். அந்த வகையில் சென்னை பேசிங்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் காலை சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பெரிய அலை எழுந்ததன் காரணமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து மீட்பு குழுவினருக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கடலுக்குள் சென்று இரண்டு சிறுவர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்கள் இருவரும் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடைய உயிருக்கு ஆபத்தில் என மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் அவர்கள் தனியாக மெரினாவில் விளையாட வந்தது தெரியவந்தது, அதை தொடர்ந்து போலீசார் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

விளையாட்டாக கடலில் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் கடலோர காவல்துறையும், மீட்பு குழுவினரும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் 2 பேர் மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொழுது அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு சென்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர பாதுகாப்பு குடும்பத்தைச் சேர்ந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் போராடி சிறுவர்களை பத்திரமாக மீட்டனர் சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர் என்பது தெரியவந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.