பிப்ரவரி 24, 2021 எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாக , ஜம்மு மற்றும் காஷ்மீரின் அர்னியா செக்டரில் உள்ள சர்வதேச எல்லையில் , எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) புறக்காவல் நிலையத்தை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் ஷெல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் , இரண்டு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 8.23 மணியளவில் ஜே&கே எல்லை மாவட்டமான சம்பாவின் அர்னியா செக்டரில் BSF துருப்புக்களை நோக்கி பாகிஸ்தான் ரேஞ்சர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக BSF அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாக்கிஸ்தான் ரேஞ்சர்ஸ் BSF இன் விக்ரம் அவுட்போஸ்ட்டை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். மேற்கு வங்கத்தில் வசிக்கும் அலோக் சாஹா மற்றும் சுர்ஜித் விஸ்வாஸ் என அடையாளம் காணப்பட்ட இரண்டு BSF வீரர்கள் பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதலில் காயமடைந்ததாக அவர் கூறினார்.

காயமடைந்த எல்லைக் காவலர்களுக்கு ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது.பிப்ரவரி 24, 2021 அன்று நடைமுறைக்கு வந்த எல்லை போர் நிறுத்த உடன்படிக்கையை மீறும் முதல் பயங்கர தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்னர் இரண்டு மூன்று எல்லை தாண்டிய தாக்குதல் நடந்திருந்தாலும் , இவற்றில் இந்திய வீரர்கள் யாரும் காயம் அடையவில்லை .
2021 இந்தியா-பாகிஸ்தான் எல்லை போர்நிறுத்த உடன்படிக்கையாக்கு பிறகு எல்லையில் வசிப்பவர்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த உடன்படிக்கையை தொடர்ந்து எல்லையில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை மீண்டும் தொடங்கியிருந்தனர் .

பாதுகாப்பு அமைச்சகத்தின் தரவுகளின்படி, போர்நிறுத்த உடன்படிக்கை அமலுக்கு வருவதற்கு முன்னர் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்களில் 2021 இல் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .
பாகிஸ்தானின் இந்த எல்லை தாண்டிய தாக்குதலால் , ஜம்மு , காஷ்மீர் எல்லை பகுதியில் மிகவும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இந்திய ராணுவம் ஜம்மு மற்றும் காஷ்மீர் எல்லை பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளது .
Leave a Reply
You must be logged in to post a comment.