சென்னையை சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் மூழ்கி பலி – சபரிமலையில் இருந்து திரும்பும் போது நிகழ்ந்த சோகம்..!

2 Min Read

தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஐயப்ப பக்தர்கள், கேளராவில் பம்பை ஆற்றின் ஒரு பகுதியான பரக்காட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

சபரிமலையில் இந்த வருட மண்டல கால பூஜைகள் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. முந்தைய வருடங்களை போலவே இந்த வருடமும் மண்டல காலம் தொடங்கிய உடன் சபரிமலைக்கு பக்தர்கள் படையெடுக்க தொடங்கினர். மேலும் தொடக்க நாட்களில் தினமும் சராசரியாக 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பக்தர்கள் வந்தனர். வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்தது. சில நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனால் பக்தர்கள் 10 முதல் 16 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு குடிநீர் கழிப்பிடம் உள்பட எந்த வசதியும் செய்து தரப்படாததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

பம்பை ஆற்றில் மூழ்கி பலி

இதனை தொடர்ந்து, கேரளா உயர்நீதிமன்றம் தலையிட்டு பக்தர்களுக்கு உடனடியாக வசதிகள் செய்து கொடுக்க உத்தரவிட்டது. சென்னையில் இருந்தும் இந்த முறை ஏராளமான பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு சென்றனர். சபரிமலை தரிசனம் முடித்து திரும்பிய சென்னை சேர்ந்த இரண்டு பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்கும் போது மூழ்கி இருந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தியாகராய நகரை சேர்ந்த சந்தோஷ் வயது 19 மற்றும் அவினாஷ் வயது 21 ஆகிய இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் முடிந்து நேற்று மதியம் இவர்கள் சென்னைக்கு புறப்பட்டனர்.

இதனால் மாலை 5:30 மணி அளவில் இருவரும் செங்கனூரில் பம்பை ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் செங்கனூரில் பம்பை ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்தும் செங்கனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

Leave a Reply