திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகள் சுய தொழில் தொடங்கிட ஏதுவாக கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி 19 திருநங்கைகளுக்கு ரூ.9 லட்சத்து கடன் உதவிகளை வழங்கினார்.
பின்னர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ 40 நபர்களுக்கு தையல் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.
அப்போது திருநங்கைகளிடம் கலெக்டர் பேசுகையில் திருநங்கைகள் அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்க்கை தரத்தையும், வருமானத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. மேலும் திருநங்கைகள் தங்களது குறைகளை எப்போதும் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். படித்த திருநங்கைகளுக்கு தகுதியின் அடிப்படையில வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் . இதில் மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.