2023 ஜூலை மாதத்தில் 19.88 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இ.எஸ்.ஐ.சி) தற்காலிக சம்பளப் பட்டியல் தரவு தெரிவிக்கிறது.
2023 ஜூலை மாதத்தில் சுமார் 27,870 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டம் சமூக பாதுகாப்பு அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜூலை மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த 19.88 லட்சம் ஊழியர்களில், 25 வயதிற்குட்பட்ட 9.54 லட்சம் ஊழியர்கள் புதிய பதிவுகளில் பெரும்பான்மையாக உள்ளனர். இது மொத்த ஊழியர்களில் 47.9% ஆகும்.
ஊதிய தரவுகளின் பாலின வாரியான பகுப்பாய்வு, 2023 ஜூலையில் பெண் உறுப்பினர்களின் நிகர சேர்க்கை 3.82 லட்சமாக இருப்பதைக் குறிக்கிறது. 2023 ஜூலை மாதத்தில் மொத்தம் 52 திருநங்கைகள் இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாக தரவு காட்டுகிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதன் நன்மைகளை வழங்க தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் உறுதிபூண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது.
தரவு உருவாக்கம் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை என்பதால் சம்பளப் பட்டியல் தரவு தற்காலிகமானது.
Leave a Reply
You must be logged in to post a comment.