அசுர பலத்துடன் களமிறங்கும் ஐதராபாத்.! எப்படி எதிர்கொள்வார் கே.ல் ராகுல்..!!

3 Min Read
ராகுல் - எய்டன் மார்க்கரம்

16வது ஐபிஎல் சீசனுக்கான 10வது லீக் போட்டி இன்று லக்னோவில் நடக்க உள்ளது. இதில் லக்னோ அணியை எதிர்த்து ஐதராபாத் அணி இன்று இரவு களமாட உள்ளது. டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்ற நிலையில், சென்னை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது யாவரும் அறிந்ததே. இதனால், ஐதராபாத் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் லக்னோ அணிக்கு கூடுதல் பிரஷர் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -
Ad imageAd image

ஆனால் அந்த பிரஷரை போக்க, தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டி காக் லக்னோ அணியுடன் இணைந்துள்ளார். டி காக் லக்னோ அணியுடன் இணைந்தது சிறந்த வாய்ப்பாக இருந்தாலும், லக்னோ அணியின் பிரச்சனையும் அங்கு தான் தொடங்கியுள்ளது. ஏனென்றால் கடந்த சீசனில் டி காக் தொடக்க வீரராக களமிறங்கி வந்தார்.

இதனால் மீண்டும் தொடக்க வீரராக களமிறக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். ஆனால் கடந்த 2 போட்டிகளில் அரைசதம் விளாசி கைல் மேயர்ஸ் கம்பீரமாக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அதேபோல் மார்க் வுட்டை நீக்குவதை பற்றி லக்னோ அணி கனவில் கூட சிந்திக்க முடியாத வாய்ப்பை வுட் அவர்கள் உருவாக்கி வைதுள்ளார். இதனால் நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரில் ஒருவரை தான் அணியில் இருந்து நீக்க வேண்டும். இதில் யாரை நீக்கிவிட்டு டி காக்கை, கேப்ட்டன் கே.எல்.ராகுல் அணிக்குள் கொண்டு வரப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதேபோல் டி காக் வந்தால் கே.எல்.ராகுல் அல்லது கைல்,மேயர்ஸ் இருவரில் யார் மிடில் ஆர்டரில் விளையாடப் போகிறார்கள் என்பதும் குழப்பமாக இருக்கும். மற்றபடி லக்னோ அணியின் பலம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.ஐதராபாத் அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெரும் தோல்வியை சந்தித்தது. தற்போது ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம், மார்கோ யான்சன், கிளாஸன் ஆகியோர் ஐதராபாத் அணியுடன் இணைந்துள்ளனர்.

இதனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரிசம பலத்துடன் கம்பீராக ஐதராபாத் அணி காட்சியளிக்கிறது. டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா, த்ரிபாட்டி, மயங்க், புரூக், மார்க்ரம் மற்றும் கிளாஸன் ஆகியோர கொண்ட பேட்டிங் வரிசையை அவ்வளவு எளிதாக வீழ்த்திட முடியாது. அதேபோல் உம்ரான் மாலிக், நடராஜன், மார்கோ யான்சன், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் என்று அனைத்து வகையான வேகப்பந்துவீச்சாளர்களும் கொண்ட ஐதராபாத் பந்துவீச்சை அடிப்பது கடினமாக பார்க்கப்படுகிறது. இவர்களோடு மார்க்ரமும் சுழல் பந்துவீச்சை வீசக்கூடியவர்.

இதனால் முன்பை விட பலமாக உள்ள ஐதராபாத் அணி முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் லக்னோ மைதானம் என்பதால், பிட்ச் எப்படி செயல்படும் என்பதை பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.ஏனென்றால் லக்னோ மைதானத்தில் செம்மண் மற்றும் கருப்பு மணலில் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஆட்டம் செம்மண் பிட்ச்சில் நடந்ததால்,
இம்முறை கருப்பு மண்ணால் தயாரான பிட்ச்-ல் விளையாட வாய்ப்புள்ளது.

கடந்த முறை இந்த பிட்ச்சியில் இந்திய அணி ஆடிய போது நியூசிலாந்து அணியுடனான லோ ஸ்கோரிங் த்ரில்லராக ஆட்டம் மாறியது. ஹர்திக் பாண்டியா, இதுபோன்ற பிட்ச்-கள் டி20 போட்டிக்கு உகந்தது அல்ல என்று கருத்து கூறியது குறிப்பிடத்தக்கது.பொறுத்திருந்து பார்ப்போம் வெற்றி வாய்ப்பு யாருக்கென்று..!!!

Share This Article

Leave a Reply