கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீடு மற்றும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துயினர் நேற்று முன்தினம் சோதனை நடத்த வந்தபோது வருமான ஊழிய வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரில் 15 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் இருவர் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் இல்லம் மற்றும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்து முயன்றனர். இன்று வரை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அப்பொழுது சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் முன்பு திரண்ட ஏராளமான திமுகவினர் வருமானவரித்துறை பெண் அதிகாரி காயத்ரி மற்றும் 3 வருமான வரி அதிகாரிகளுடன் தகராறு ஈடுபட்டு அவர்களை தாக்கினார். தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். தாக்குதலுக்கு உள்ளான நான்கு வருமான வரித் துறை அதிகாரிகளும் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆகினார். வருமானத் துறை அதிகாரிகள் அளித்த புகாரியின் பேரில் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து மத்திய பாதுகாப்புடன் வரவழைக்கப்பட்டு நேற்று முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தாந்தோன்றிமலை காவல் நிலையங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அடிப்படையில் இதுவரை திமுகவினர் 15 பேர் கரூர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களில் லாரன்ஸ் மற்றும் பூபதி ஆகியோர் கரூர் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வருமான வரி துறை அதிகாரிகள் கணேஷ் முருகன் கிரஷர் மற்றும் நிதிநிறுவன அதிபர் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, சோதனைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளை கணேஷ் முருகன் கிரஷர் உரிமையாளர் குணசேகரன், மற்றும் அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல் ஆகியோர் மிரட்டியுள்ளனர்.
இதுங்குறித்து வருமான வரித்துறையினர் அளித்த புகாரில் கணேஷ் முருகன் கிரஷர் உரிமையாளர் குணசேகரன், மற்றும் அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.