திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு ரயிலில் கடத்தி செல்வதற்கு தயார் நிலையில் இருந்த 1440 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் துறையின் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசிகளை ஒரு சில கும்பல் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை மூட்டைகளாக கட்டி ரயில் பேருந்து மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலமாக ஆந்திரா உட்பட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதை தொழிலாக செய்து வருகின்றன.இதுபோன்ற ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வழங்கல் துறையின் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் அடிக்கடி பஸ் ரயில்களில் மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து அகும்பலால் கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து வருகின்றன. இதேபோல் திருவள்ளூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தலைமையில் பறக்கும் படையினரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி செல்வதற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருப்பதாக நேற்று மாலை பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜவகர்அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதைத்தொடர்ந்து வட்ட வழங்கல் அலுவலர் ஜவகர் பறக்கும் படை துணை தாசில்தார் சரவணன் தலைமையில் ஊழியர்கள் பொன்னேரி ரயில் நிலையத்துக்குச் சென்று நடைமேடை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர் அங்குள்ள நடைமேடை பகுதியில் ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்தி செல்வதற்கு தயார் நிலையில் கட்டி வைத்திருந்த 1440 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பொன்னேரி அருகே பஞ்செட்டில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வணிப கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி செல்லும் நபர் யார் யார் ?அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்கள் யார் ? என்று பறக்கும் படையினர் மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றன . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.