ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1 1/2 வயது குழந்தை முகமது மகிருக்கு சிகிச்சை அளிக்கும்போது அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் வழக்கை விசாரித்த நிபுணர் டாக்டர்கள் குழு புதன்கிழமை தனது அறிக்கையை அளித்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர் மீரான் இவருக்கு அப்துல் அஜிஸா என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் , கடநத 1 1 /2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் முகமது மகிர் என்ற மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளார் .
அவர்களது இரண்டவது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்ததாகவும், 5 மாதங்களில் (ஏட்ரியல் செப்டல் டிஃபெக்டுடன் டெட்ரா வென்ட்ரிகுலர் ஹைட்ரோ செபாலஸ்) என்ற அரியவகை மூளை மற்றும் இருதய நோயால் கண்டறியப்பட்டதாகவும் நிபுணர்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது . அந்த குழந்தைளு வளர்ச்சி தாமதம் மற்றும் மூட்டுகள் குறைந்த இடைவெளியில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர் .

கடந்த 2022 ம் ஆண்டு, மே மாதம் , மகிரின் உடல்நிலை மோசமானதால் , குழந்தைக்கு ஸ்டண்ட் பொறுத்தப்பட்டதாகவும் . இந்த அறுவை சிகிச்சையின் போது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மகிரை, ஒரு மாதம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் (PICU) குழந்தை நரம்பியல் நிபுணர்களின் கண்காணிப்பில் இருந்துள்ளார் மகிர் .
பின்பு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் குழந்தை மகிருக்கு மூளைத் தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளனர் .
ஜூன் 29 அன்று, குழந்தைக்கு IV மருந்துகள் செலுத்தப்பட்ட பின்னர் வலது கை சிவந்திருப்பதைக் கண்ட குழந்தையின் தாய் அஜிஸா அங்குள்ள செவிலியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார் , அதன் பின்னர் வெண்பலான் அகற்றப்பட்டு , மறுநாள், பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் குழு குழந்தையைப் பரிசோதித்தது , அப்பொழுது மகிரின் உடலின் ஒரு பகுதியின் இயக்கத்தைத் தடுக்கும் நோயைக் கிருமி உருவாவதை கண்டறிந்த மருத்துவர்கள் , அதனை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஜூலை 1 அன்று வலது கையின் நிறமாற்றம் மற்றும் அசைவு இழப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் கருத்து கேட்கப்பட்டது. வலது மேல் கையில் இரத்த ஓட்டம் குறைந்ததால், மகிரின் வலது கையை துண்டிக்க எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மகிர் மாற்றப்பட்டான் .
குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும்போது அலட்சியமாக இருந்ததாக பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில் ,மருத்துவர்கள் அதனை மறுத்துள்ளனர். குழந்தையின் உயிரை காப்பாற்றவே அவரது கை துண்டிக்கப்பட்டதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் .
Leave a Reply
You must be logged in to post a comment.